ராகுவின் அருள் கிடைக்க தினமும் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்…!

நாகலிங்கபூ மந்தாரை மலர்கள் கொண்டு இறைவனை பூஜை செய்வதாலும் அபிஷேகத்தில் பாலில் அபிஷேகம் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்வதாலும், நேவேத்தியத்தில் பொரி, தயிர், ஏடு, அவியல், வகைகளை நைவேத்தியம் செய்வதாலும், உளுந்து பொருட்களில் செய்யப்பட்ட வடை புளியோதரை போன்ற உணவு வகைகளை நேவேத்தியம் செய்து உண்பதாலும், சிறுநாகப்பூ மரம் நாகலிங்கம் மரம் போன்ற மரங்களை நடுவதாலும், சிறுநாகப்பூ மரம் நாகலிங்கமரம் கருங்காலிமரம் செங்கருங்காலி மரம் மருதமரம் கடம்புமரம் போன்றவற்றிக்கு தண்ணீர் ஊற்றி வணங்கிவருவதாலும் ஆடை வகைகளில் நீலம் கருப்பு கருநீலம் கருப்பு கோடுகள் நீலநிற கோடுகள் போன்ற ஆடைகளை அணிவதாலும் ராகுவின் அருள் பெறலாம்.ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி தென்மேற்கு திசைகளில் வசிக்கலாம்-வீடுகள் கட்டலாம்.

ராகுதோஷம் நீங்க

‘அரிம் ஸ்ரீம் நசிமசி’ மந்திரம் ஜெபித்தால் ராகுதோஷம் நீங்கும்.மேலும் ராகுவின் காயத்ரி மந்திரமான

நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி!
தந்தோ ராஹீ ப்ரசோதயாத்!

மந்திரத்தை தினமும் 18 தடவை சொல்லாம். ராகுதிசை ராகுபுத்தி நடப்பவர்கள் தினமும் சொன்னால் சிறப்பான பலன்களை அடையலாம்.

பதினெட்டு சித்தர்களில் புலிப்பாணி சித்தர் நாகதோஷ பரிகாரம் நீங்க 300 வழிமுறைகள் கூறியுள்ளார்.

மேலும், புலிப்பாணிசித்தரின் குருவான போகர் சித்தர் வைத்திய நுல்களிலும் ராகுதோஷம் நீங்க வைத்திய முறையில் 47 வகை வழிமுறைகள் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்