நெல்லியடியில் இளைஞர்கள் மீது கொடூரத் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்க தகடு இன்றி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.குறித்த இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்