உலகில் மிகக் கொடிய வியாதியான புற்றுநோயை அடியோடு விரட்டும் மிக அற்புதமான உணவுகள்!! அவசியம் படியுங்கள்…….

உலகில் இதய நோய்க்கு அடுத்த படியாக மக்கள் அவஸ்தைப்படும் ஒரு நோய் தான் புற்றுநோய். இத்தகைய புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.ஒவ்வொரு வகை புற்றுநோயும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் அனைத்தும் சாதாரணமாக நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் போன்று தான் இருக்கும்.

அதை ஆரம்பத்திலேயே கவனித்து, முறையாக சிகிச்சை பெற்று வந்தால், புற்றுநோயினால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம்.ஆனால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து ஒருசில உணவுகள் நம்மைப் பாதுகாக்கும் என்பது தெரியுமா? ஆம், நாம் உண்ணும் சில உணவுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.உங்களுக்கு அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

கேல்:
கேல் என்பது ஒருவகை கீரை. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதோடுஇ தடுக்கவும் செய்யும். இது முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. இதில் ஏராளமான அளவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.

ப்ராக்கோலி:
ப்ராக்கோலியில் உள்ள சல்போராஃபேன் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடும். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான், புற்றுநோயை சரிசெய்யும் உணவுகளுள் சிறப்பானதாக கருத வைக்கிறது. அதிலும் ப்ராக்கோலி ஸ்புரூட்ஸ் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மிகச்சிறப்பானது.

க்ரீன் டீ:
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள், கருப்பை, கணையம் மற்றும் வயிற்றுப் புற்றுநோயைத் தடுப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் ஒரு கப் க்ரீன் டீயை குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கடுகு:
தாளிக்கப் பயன்படுத்தும் கடுகு, புற்றுநேயைத் தடுக்கும். சமீபத்திய ஆய்வில் கடுகில் பித்தப்பை புற்றுநேரயத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு கடுகில் உள்ள டீசோதியோசையனேட்டுகள் தான் முக்கிய காரணமாகவும் சொல்லப்படுகிறது.

எலுமிச்சை:
எலுமிச்சையில் உள்ள பெக்டின் மற்றும் லெமோனாய்டுகள் புற்றுநோய் செல்களை அழிக்கும் சத்துக்களாகும். எனவே தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால், வாய், தொண்டை, வயிற்று புற்றுநோயின் அபாயம் குறைவதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூண்டு:
பூண்டு பல்வேறு உணவுகளில் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான உணவுப் பொருள். அதுமட்டுமின்றி, இதில் உள்ள மருத்துவ குணங்களால் புற்றுநோயில் இருந்து கூட விடுபட முடியும்.

எனவே, தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். தொடர்ந்து 2 வாரம் இப்படி சாப்பிட்டால்இ நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்