மறைந்த இளவரசிக்கு ஆடைகளால் அஞ்சலி செலுத்திய வருங்கால இளவரசி!!

பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்யவுள்ள அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கல் பிரித்தானியாவில் நடைபெற்ற உத்தியோகபூர்வ கொமன்வெல்த் நிகழ்ச்சியில் அணிந்து வந்த ஆடை மறைந்த இளவரசி டயானாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மேகன் மெர்க்கல் முதன் முறையாக நேற்று ராணியுடன் ஒரு உத்தியோகபூர்வ அரச நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

இதன்போது, தனது வருங்காலக் கணவரின் தாயாகிய டயானாவுக்கு உடை வடிவமைக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளை இவர் அணிந்து அங்குள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இது தொடர்பில், மேகன் மெர்க்கல், டயானாவின் ஆடைகளை வடிவமைத்த அமண்டா வேக்லி வடிவமைத்த வெண்ணிற கோட் ஒன்றையும், டாயானாவின் தொப்பிகளை வடிவமைத்த ஸ்டீபன் ஜோன்ஸ் வடிவமைத்த தொப்பி ஒன்றையும் அணிந்திருந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்