உணவுப் பொதிக்குள் காத்திருந்த அதிர்ச்சி!! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இடியப்ப பொதியில் இருந்து சட்டை ஊசி ஒன்று கிடைத்துள்ளது.பொலன்னறுவை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள உணவகத்தில், வைத்தியசாலை ஊழியர்களில் ஒருவர் இந்த உணவகத்தில் உணவு பெற்றுக்கொண்டுள்ளார். தான் பெற்றுக் கொண்ட உணவினை ஊழியர்களுடன் இணைந்து சாப்பிடும் போது இந்த சட்டை ஊசி அவருக்கு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் வைத்தியசாலையின் இயக்குனர் மற்றும் வைத்தியசாலையின் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகம் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்தியர் இந்திக்க தன்கன்பொல தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்