ஒளிமயமான சிவராத்திரியின் நான்கு ஜாம வழிபாட்டு விவரங்கள்….

சிவராத்திரி முதல் ஜாம நேரம்:
இரவு 7.30 முதல் 9.30 மணி வரை

சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்:
இரவு 11.00 முதல் 12.30 மணி வரை

சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்:
அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை

சிவராத்திரி 4ஆம் ஜாம நேரம்:
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரைசிவராத்திரி நான்கு ஜாமங்களாக உள்ளன. அக்காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள். சிவராத்திரி தினத்தில் அதிகாலை முதல் சிவசிந்தனையுடன் எல்லா காரியங்களும் செய்தால் நன்மை பயக்கும்.அன்ன ஆகாரம் இன்றி பால் பழம் போன்றவைகள் ஒருவேளை மட்டும் உண்டு இறைவனின் பஞ்சாசரத்தை சதா சர்வகாலமும் ஓதியபடி இருந்தால் மன அமைதி பெற்று வாழ்வில் பலவித மாற்றங்கள் நமக்கு நன்மை தருவதாக அமையும். சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள். திருவண்ணா மலையில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று லட்சதீபம் ஏற்றுவார்கள். அதனை காண்பது சிறப்பாகும்.

சிவராத்திரி தினத்தில் சிவனை மனதார நினைத்து இரண்டாம் ஜாமத்தில் கிரிவலம் செய்தால் நினைக்கின்ற காரியம் வெகு விரைவில் முடியும். பிறவியில்லா பேரின்பத்தை தரும்.

லிங்கோத்பவ கால வழிபாடு:

திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி.அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

தேனாபிஷகம்:சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன் சந்திரன் மன்மதன் இந்திரன் அக்னி குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.

”உங்களை வழிபடுவதில் எந்த வழிபாடு உங்களுக்கு மிகவும் பிடித்தது…?” என்று பார்வதி கேட்க ”சந்தேகமே வேண்டாம். மகா சிவராத்திரிதான் எனக்கு மகிழ்ச்சி தரும் நாள். விலையுயர்ந்த பட்டாடைகள் நகைகளை மலர்களைவிட வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதுதான் சிறந்தது.

இரவின் முதல் காலத்தில் பாலினாலும், இரண்டாம் பகுதியில் தயிரினாலும், மூன்றாம் பகுதியில் வெண்ணெய் அல்லது பசு நெய்யினாலும், கடைசியில் தேன் அபிஷேகம் செய்தும் என்னை குளிர்வித்து அருள் பெறலாம்” என சிவபெருமானே பூஜை செய்யும் முறைகளை விளக்கியிருக்கிறார்.

இந்தத் தகவல்களையும் தயவு செய்து தவறாமல் படியுங்கள்….

மீண்டும் கைவிரித்த மைத்திரி! அடுத்த 48 மணி நேரத்திற்குள் ரணில் எடுக்கப் போகும் அதிரடி முடிவு?

உங்கள் ஆண்மையை அதிகரிக்க செலவேயில்லாமல் ஒரு சுப்பரான ஐடியா!!

ஏலியன்களிடமிருந்து தகவல்கள் வருகின்றதா? உஷாராகுங்கள்..!

 


உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்