காலையில் கண்ணாடியில் விழிப்பதற்கான காரணம்?

வங்காள மக்கள் காலையில் கண் விழித்ததும் கண்ணாடியில் முகம் பார்ப்பது வழக்கம். நம் தமிழகத்திலும் ஒரு சிலரிடையே இந்த பழக்கமுள்ளது.

கண்ணாடி மங்கலப் பொருள்களுள் ஒன்று என்றாலும் அதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

விநாயகர் சதுர்த்தி முடிந்தப்பின் பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பது போல், வங்காளத்தில் விஜயதசமியொட்டி துர்காதேவியை நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

விஜயதசமி முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் கண்ணாடியை வைப்பார்கள்.

கண்ணாடிக்கு எதிராக துர்கை சிலையினையும் வைப்பார்கள். இப்போது தேவியின் பிம்பம் கண்ணாடியில் தெரியும். அதாவது தேவியின் சக்தி கண்ணாடியில் சேர்ந்ததாக ஐதீகம்.

பின்னர், மகிழ்ச்சியாக துதிப் பாடல்களைப் பாடி, துர்கையின் சிலையினைப் பல்லாக்கில் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

மீண்டும் அம்பிகை அடுத்த ஆண்டுதான் வீட்டிற்கு வருவார் என்பதால், அதுவரை, கண்ணாடியில் துர்கையின் சக்தி இருப்பதாகப் பாவித்து, காலையில் எழுந்ததும், கண்ணாடியை தரிசித்து மகிழ்வார்கள். இதற்கு கண்ணாடி விசர்ஜனம் என்று பெயர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்