விமான நிலையத்திற்குள் நுழைந்த பசு மாட்டை கலைக்க முடியாமல் விமானங்களை திருப்பி விட்ட அதிகாரிகள்!!

அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திற்குள் பசு மாடு ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில், திடீரென்று பசு மாடு ஒன்று நுழைந்தது. இதனால், விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணியளவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் நேரத்தில், பசு மாடு திடீரென்று நுழைந்தது.பசுவைக் கண்ட அதிகாரிகள் அதனை வெளியேற்ற துரத்தினர். மிரண்ட பசு, விமானங்கள் தரையிறங்கும் பகுதிக்குள் நுழைந்ததால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானங்கள் மும்பை நோக்கி மாற்றிவிடப்பட்டன.நேற்று, அதிகாலை நிகழ்ந்த இந்த சம்வத்தால் விமான நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.விமான நிலையத்தின் பின்புறம் உள்ள கேட் மூலம் பசு மாடு உள்ளே நுழைந்துள்ளது என்று பணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இதே போல் பல விமான நிலையங்களில் பறவைகள், குரங்குகள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்