தயவு செய்து இவற்றை மட்டும் கூகுளில் தேட வேண்டாம்……தேடினால் என்ன நடக்கும் தெரியுமா?

முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சந்தேகம் என்றால் பல நூலகங்களுக்குச் சென்று பல புத்தகங்களைப் படித்து ஆராய்ந்து தெரிந்து கொள்வோம். ஆனால் தற்போது இன்டர்நெட் என்ற ஒன்று வந்த பின்னர், அனைத்தையும் உட்கார்ந்த இடத்திலேயே கணினி அல்லது லேப்டாப்பில், தகவல்களைத் தேட பயன்படும் தேடல் இயந்திரமான கூகுள் உதவியுடன் தெரிந்து கொள்கிறோம்.அப்படி நீங்கள் கூகுளை அதிகம் பயன்படுத்துவோராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வார்த்தைகளை மட்டும் கூகுள் படங்களில் பார்க்காதீர்கள். ஏனெனில் இந்த வார்த்தைகளுக்கான படங்கள் மிகவும் மோசமாகவும், சில நேரங்களில் நம்மை மெய்சிலிர்க்கவும் செய்யும் வகையில் இருக்கும்.

Clock Spider

உங்களுக்கு சிலந்திகள் என்றால் பயம் என்றால், இந்த சொல்லை மட்டும் கூகுள் படத்தில் பார்க்காதீர்கள். ஏனெனில் இதனால் உலகில் உள்ள பல அருவெறுக்கத்தக்க சிலந்திகளைக் காண நேரிடும்.

Any Medical Symptom

தயவு செய்து இதை கூகுள் படத்தில் தேடினால், நிச்சயம் நீங்கள் மனம் தளர்ந்துவிடுவீர்கள். ஏனெனில் அந்த அளவில் படுமோசமான வெறும் புற்றுநோய்க்கான அறிகுறிகளைத் தான் காண்பீர்கள். எனவே, இதையும் தேடி பார்க்க வேண்டாம்.

Wet Koala

இந்த சொல் ஒரு பயங்கரமான மிருகத்தின் பெயர். இது நம்மை அச்சுறுத்தும் வகையில் படு பயங்கரமாக இருக்கும். ஆனால் இது ஒரு போட்டோஷாப் படம் தான். நல்ல வேளை இம்மாதிரியான மிருகம் உண்மையில் இருந்தால் எப்படி இருக்கும்! அம்மாடியோவ்வ்வ்வ்….

Peanut Dog

நாய் விரும்பிகள், இந்த நாயைக் கண்டதும் நிச்சயம் அஞ்சக்கூடும். ஏனெனில் உலகிலேயே மிகவும் அசிங்கமான மற்றும் பயமுறுத்தும் வகையில் இருக்கும் நாய் தான் இது. நாங்கள் அந்த நாயின் படத்தைக் கொடுக்கவில்லை. வேண்டுமானால் கூகுள் படத்தில் தேடிப் பாருங்கள்.

Bedbugs On Mattress

உங்களுக்கு தைரியம் இருந்தால், இதை கூகுள் படத்தில் பாருங்கள். நிச்சயம், இனிமேல் உங்கள் படுக்கையில் படுப்பதற்கு அஞ்சுவீர்கள்.

Skin Condition

இதை கூகுள் படத்தில் பார்த்தால், இம்மாதிரியான நிலை தன் வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்று நிச்சயம் நீங்கள் நினைப்பீர்கள். ஏனெனில் அந்த அளவில் படு மோசமான சரும பிரச்சனைகளை நீங்கள் காண்பீர்கள்.

Trypophobia

இந்த சொல்லை கூகுள் படத்தில் தேடினால், பலரும் மெய்சிலிர்ப்பார்கள். சொல்லப்போனால், இந்த சொல்லின் படத்தை இரவில் படுக்கும் முன் கூகுள் படத்தில் கண்டால், இரவில் தூக்கத்தையே தொலைத்துவிடுவீர்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்