நான்காவது தடவையாகவும் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடும் விளாடிமிர் புடின்!

அலுவலகத்தில் இருந்துக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை கவனிப்பதைவிட, மக்களை நேரில் சந்தித்து உரையாடுவதானது வெளிப்படையானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் அமையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முதலாவது உத்தியோகப்பூர்வ தேர்தல் பிரசார கூட்டம் மொஸ்கோவில் நேற்று  நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியான விளாடிமிர் புடினின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக புடின் அறிவித்தார்.வோல்கா நகரின் பிரபல கார் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் புடின், கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி உரையாற்றியபோதே மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்