கல்கிஸையில் மாட்டியது நடமாடும் விபச்சார விடுதி!! இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது!

கொழும்பு கல்கிஸ்சை பிரிவென வீதியில் நடமாடும் விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது அதனை நிர்வாகித்த ஆண் ஒருவரும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 23, 28, மற்றும் 35 வயதுடைய நுகேகொட பிரதேசம் மற்றும் மஹரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்