ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் நீடிக்கும் முரண்பாடுகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பதவிக் காலம் குறித்து தீர்வு காண்பதில் சட்ட முரண்பாடுகள் நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இடையீட்டு மனுதாரராக நேற்று (வியாழக்கிழமை) ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர.டி.சில்வா, 19ஆவது திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுக்கு மட்டுமானது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் ‘ஜனாதிபதி தனது இணையத்தளத்தில் கூட பதவிக்காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைக்க ஜனாதிபதி ஏற்கனவே இணங்கியுள்ளார்’ என்றும் சட்டத்தரணி மனோகர டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஏழு இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இவை தொடர்பில் வாய்மூல விளக்கங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் மனு தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப் நியமித்துள்ளார்.பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப் நீதியரசர்களான ஈவா வனசுந்தர புவனேக அளுவிகார, சிசிர.டி.ஆப்ரூ, மற்றும் நீதியரசர் கே.ரி.சித்ரசிறி, ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்