வைரவப்பெருமானை இப்படி வழிபட்டால் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்…!!

சிவரூபமான தட்சிணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்கமூர்த்தி அருவ வழிபாட்டிற்கும் வைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கபட்டு வருகிறார்கள்.சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி,முருகன்,வைரவர், வீரபத்திரர்,சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது. ஐவரில் மகாவைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்யமூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக்கோலத்தினறாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் வைரவப்பெருமான்.

காலையில் ஆலயம் திறந்தவுடன்,இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் வைரவருக்கு என்று விஷேசபூஜைகள் செய்யப்படவேண்டும் என்று பார்த்த நித்தியாபூஜா விதி கூறுகிறது. அதேபோல் ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டி சாவியை வைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

வழிபாடு
வைரவப்பெருமானை காலையில் வழிபட சர்வநோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பிய யாவும் கிட்டும். மாலையில் வழிபட்ட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மண் ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான வைரவப்பெருமானை அடையும் சாகாக்கல்வியும், மரணமில்லாப்பெருவாழ்வும் கூட கிட்டும்.

தீபம்
வைரவப்பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக்கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப்பிளந்து அதனுள் எண்ணை அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பிரசாதம்
வைரவப்பெருமானுக்கு சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம், தேன், செவ்வாழை, வெள்ளப்பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

அர்ச்சனை
வைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக்கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

சந்தன காப்பு
வைரவமூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்ந்தது சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு வைரவலோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விஷேம்.
இவ்வாறு வழிபடுவர வைரவ பெருமானின் அருள் ஆசி கிடைக்கும்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்