பெண்களே இது உங்களுக்கான எச்சரிக்கை பதிவு !தயவு செய்து அல்டசியம் வேண்டாம்

தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள்.

சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதுண்டு. அவர்கள் மொபைல் போன் தொலைந்து அது குற்றவாளிகள் கையில் கிடைக்கும் போது அந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து ‘‘மார்பிங்” செய்து பேஸ்புக் மற்றும் இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.

ஒரு வேளை பேஸ்புக்கை தவிர வேறு வெப் சைட்டில் உங்கள் ஆபாச புகைப்படம் வந்தால் ‘‘கான்டெக்ட் யூஸ்” என்ற ஆப்சனுக்கு நீங்கள் புகார் செய்தால் அந்த ஆபாச படம் அல்லது வீடியோ உடனே நீக்கப்பட்டு விடும்.

இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத பட்சத்தில் நீங்கள் காவல்துறையிடம் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும்.

அப்போது தான் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் வேறு யாருக்காவது கெடுதலை செய்வதற்கு முன் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

பேஸ்புக்கில் ‘‘பிரைவெட் செட்டிங்ஸ்” என்ற ஒரு வசதி உள்ளது. அதை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் உங்கள் புகைப்படங்களை பார்க்க இயலாது.

‘‘மார்பிங்” என்றால் என்ன? மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பல பெண்களுக்கு இன்னமும் சரியாக தெரிவதில்லை.

ஒரு பெண்ணின் புகைப்படத்திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு பெண்ணின் புகைப்படத்தில் பொருத்தி அந்த படத்தை சமூக விரோதிகள் பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள்.

இந்த முறைக்கு ‘‘மார்பிங்” என்று ஆங்கிலத்தில் பெயர். இந்த ‘‘மார்பிங்” வகை குற்றங்கள் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் நடந்து வருகிறது.

இணைய தளத்தில் உங்கள் புகைப்படத்தை பகிர்வு செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் பகிர்வு செய்ய வேண்டும்.

மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படத்தை பகிர வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே புகைப்படங்கள் மார்பிங் செய்யப்படுவதை தடுக்க முடியும்.

பெண்கள் மீது பாய்ச்சி அந்த பெண்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பெற்றோர்களும் மற்றும் “மார்பிங்” செய்யப்படும் குற்றங்களில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள விழிப்புணர்வுடனும், முன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்