இலங்கை கிரிக்கெட் சபையை கலைக்கப் போவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் எச்சரிக்கை

நிர்வாக நடவடிக்கைகளை சரியாக செய்வதற்கு அதிகாரிகள் ஆதரவு வழங்காவிடின் கிரிக்கெட் சபை கலைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்வி பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்;விளையாட்டு சங்கங்களின் தேர்தல்களின் போது பக்கச்சார்பான வாக்குகளை பெற்று கொள்வதற்காக சில தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பக்கசார்பானவர்களின் ஆணைக்கு அடிபணிந்துள்ளனர். இந்த நிலை மாறவேண்டும்.

தேர்தலின் போது பயன்படுத்தப்படும் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான வாய்ப்பு தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்’ எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்