சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாட டோனி மீண்டும் வருவது உறுதி!!

தடைகளை கடந்து 11வது ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில், டோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.டோனியை தவிர, கடந்த 2015ஆம் ஆண்டில், அதாவது தடைக்கு முன்னதாக சென்னையில் விளையாடிய இரு வீரர்கள் ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால், டோனியை தவிர்த்து, மேலும் இரு வீரர்களை தெரிவுசெய்யும் பணியில் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, கிறிஸ் மோரிஸ், பிராவோ, பிரண்டன் மெக்கலம் ஆகிய முக்கிய வீரர்களில் இருந்து இரு வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதே நியதி, இரண்டு ஆண்டுகள் தடைபெற்ற மற்றொரு அணியான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்