உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பஷில் ராஜபக்ஷவுடன் கூட்டுச் சேரும் மலையக தேசிய முன்னணி!!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மலையகத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக மலையக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.ஹட்டனில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி வேட்பாளர் தெரிவின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக் கூடாது. தேர்தல் சட்டங்களை நூறு வீதம் மதித்து அதன் அடிப்படையில் நாம் போட்டியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்துவதற்கு மலையக தேசிய முன்னணி முழு அளவில் ஆதரவளிக்கும்.மலையக மக்களின் சமூக பொருளாதார உரிமைகளை மேம்படுத்தி உறுதி செய்யவும், அரசியல் ரீதியான
அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கவும் தமது கட்சி அயராது குரல் கொடுக்கும் என கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்

Advertisement