எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் களமிறங்கத் தயாராகும் தமிழ் தேசியப் பேரவை!

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியப் பேரவை எனும் பெயரில் புதிய கூட்டமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது.எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தமிழ்த்தேசியப் பேரவை அறிவித்துள்ளது.அத்துடன் எதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்