கந்தானையில் கோர விபத்து! ஒருவர் பலி! இருவர் படுகாயம்!

கந்தானைப் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் மோட்டார் வாகனம் ஒன்று புகையிரதத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 7.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோட்டார் வாகனத்தை செலுத்த முற்பட்ட போது புத்தளத்தில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் மோதியுள்ளது.

அத்தோடு பக்கத்தில் இருந்த முச்சக்கர வண்டியிலும் குறித்த மோட்டார் வாகனம் மோதியுள்ளது.

விபத்தின் போது மோட்டார் வாகனத்தில் பின்னால அமர்ந்திருந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்தில் காயமடைந்த 35 வயதுடைய மோட்டார் வாகனத்தின் சாரதியும் 40 வயதுடைய முச்சக்கர வண்டியின் ஓட்டுனரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்