வித்தியா படுகொலை வழக்கு- செப்ரெம்பர் 27ல் இறுதித் தீர்ப்பு!

யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்ப்பாயத்தினால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன. வழக்குத் தொடுநர் தரப்பின் சாட்சிய தொகுப்புரைகள் நேற்று வழங்கப்பட்டன. இன்று எதிரிகள் தரப்பு சாட்சிய தொகுப்புரைகள் வழங்கப்பட்டன.

வித்தியா கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன.

வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களில் முதலாம் ஏழாம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய ஏழு பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாக வித்தியா படுகொலை வழக்கின் தொகுப்புரையில் பிரதி சொலிசிஸ்ரர் ஜெனரல் குமார் ரட்ணம் தெரிவித்திருந்தார்.

எனவே முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய ஏழு பேருக்கும் எதிராகவே எதிர்வரும் 27 ஆம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படவிருக்கின்றது.

அதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்ப்பாயம் மீண்டும் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே குறித்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்