அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எந்த நேரத்திலும் சசிகலா நீக்கம்?

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்தது அக்கட்சியின் பொதுக் குழு. ஆனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்படவில்லை.

அமைச்சர்கள் எதிர்ப்பு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை ஒத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டது.


ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அதிகாரம் இந்நிலையில் அதிமுக பொதுக் குழுவில், கட்சியின் உறுப்பினர்களை சேர்க்கும் நீக்கும் அதிகாரம் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்டுப்பாட்டில் முழுவதுமாக சென்றது.

தினகரனுக்கு பதிலடி:

இதனிடையே அதிமுக தலைமை நிலையச் செயலர் பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை நீக்குவதாக இன்று அறிவித்தார் தினகரன்.

இதற்கு பதிலடியாக சசிகலாவை அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கும் அறிவிப்பை வெளியிட ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவு செய்துள்ளனர்.

எந்த நேரத்திலும் நீக்கம்?

இது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து எந்த நேரத்திலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியாகலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்