எட்டியாந்தோட்டையில் மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை!

எட்டியாந்தோட்டை முரளி தோட்டத்தில் தனது மனைவியை கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (11) மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குடும்பத் தகராறு இதற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.

34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக தொடர்ந்த குடும்ப பிணக்கு முற்றிய நிலையில் நேற்று முன்தினம் குறித்த பெண் தனது கணவருடன் ருவன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் வந்து தாம் விவாகரத்து செய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் அவர்களிருவரும் வெவ்வேறாக இருந்ததாகவும் சம்பவம் இடம்பெற்ற தினம் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சந்தேகநபரான கணவர் மீண்டும் வந்து மறைவாக இருந்ததாகவும், அதே சமயம் தோட்ட இலிகிதராக கடமையாற்றும் குறித்த பெண் மதிய உணவு வேளைக்காக வந்த போது பெண் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பின்னர் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் தனது மனைவிலைய் கொலை செய்ததாகவும், இதனால் தானும் தற்கொலை செய்து கொள்வதாக தெரியப்படுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அருகிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றில் குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த தம்பதியினருக்கு 11வயது மகன் ஒருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் தொடர்பான நீதவான் பரிசோதனைகள் நேற்று இடம்பெற்றதுடன் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்