திறந்த போட்­டிப்­ப­ரீட்சைக்கு விண்­ணப்பம் கோரல்

இலங்கை பொறி­யி­ய­லாளர் சேவையின் III ஆம் தரத்­திற்கு அலு­வ­லர்­களை சேர்ப்­ப­தற்­கான திறந்த போட்­டிப்­ப­ரீட்சை தொடர்­பான விண்­ணப்­பங்­களை அர­சாங்க சேவை ஆணைக்­குழு கோரி­யுள்­ளது.

நாடு­மு­ழு­வதும் அமைந்­துள்ள அர­சாங்க நிறு­வ­னங்­களில் இலங்கை பொறி­யி­ய­லாளர் சேவையின் III ஆம் தரத்தைச் சேர்ந்த சிவில் பொறி­முறை, புகை­யி­ரத திணைக்­க­ளத்தின் மின் மற்றும் மின்பொறி­யியல் ஆகிய துறை­களில் காணப்­படும் 229 வெற்­றி­டங்­க­ளுக்கு ­த­கு­தி­யா­ன­வர்­களைத் தேர்ந்­தெ­டுக்­கவே இப்­போட்­டிப் ­ப­ரீட்சை நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

விண்­ணப்ப இறு­தித்­தி­கதி 25.09.2017 ஆகும். சிவில் துறையில் 162 பேருக்கும் பொறி­முறை துறையில் 15பேருக்கும் மின் துறையில் 9 பேருக்கும் பௌதீ­க­வ­ளங்கள் துறையில் 42 பேருக்கும் இர­சா­ய­னத்­து­றை யில் ஒரு­வ­ருக்­கு­மாக இவ்­வெற்­றி­டங்கள் நில­வு­கின்­றன.

இதற்கு 21–-35வய­துக்­குட்­பட்ட தொழில் சார் தகை­மை­பெற்ற பொறி­யி­ய­லா­ளர்கள் மாத்­தி­ரமே விண்­ணப்­பிக்­க­ மு­டியும்.

விண்­ணப்­பங்­களின் எண்­ணிக்­கை­யை ­பொ­றுத்து கூடு­மாயின் திறந்த போட்­டிப் ­ப­ரீட்சை மற்றும் நேர்­முகத் தேர்வின் அடிப்­ப­டையில் தெரிவு இடம்­பெறும்.

குறை­யு­மாயின் பரீட்­சை­யின்றி நேர­டி­யாக நேர்­மு­கத்­தேர்வின் அடிப்­ப­டையில் தெரிவு இடம்­பெறும் என பொது­நி­ர்வாக முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்