70 வயது பழங்குடியின ஜோடிக்கு வட இந்தியாவில் ஜோராக நடந்த திருமணம்!

வட இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் ‘பஹாடி கோர்வா’ எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த முதியவர்கள் இருவர், திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள்.75 வயது ரதியா ராம் என்ற மணமகனும் 70 வயது ஜீவ்னி படி என்ற மணமகளும் தங்கள் சமூகத்தினரிடம் அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டனர்.

தனியாக இருக்கும் எந்தவொரு ஆண்மகனும், தனியாக இருக்கும் பெண்ணுக்கு வளையல் போட்டு, லிவ் இன் ரிலேஷனில் வாழலாம் என்பது இந்த சமூகத்தினரின் நடைமுறை வழக்கம்.

எனவே, வாழ்க்கையின் அந்திம காலத்தில் முதியவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
சத்தீஸ்கரின் ஜஷ்புர், கோர்வா, பிலாஸ்புர், சர்குஜா, சூரஜ்புர் மற்றும் ராய்கட் மாவட்டங்களைத் தவிர சில தொலைதூர மலைப் பகுதிகளில் கோர்வா சமூகத்தினர் வசிக்கின்றனர்.இந்த சமூகத்தின் மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 37 ஆயிரம் மட்டுமே .

காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும், வேட்டையாடியும் வாழ்க்கையை கழித்து வரும் இந்த இனத்தினர், முதிர் பருவ காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்ச்சியடைந்தனர்.

புதுமண தம்பதிகளுக்கு உற்றார் உறவினர் எனப் பலர் இருந்தாலும், இவர்களை கவனித்துக் கொள்வதற்கு யாரும் இல்லை என்பது தான் கவலையான விடயம்.

’15 நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போதே இருவரும் ஒன்றாக வசிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டோம்’ என்று மணமகன் ரதியா ராம் சர்வதேச செய்திச் சேவையொன்றிடம் தெரிவித்தார்.

’15 நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போதே இருவரும் ஒன்றாக வசிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டோம்’ என்று மணமகன் ரதியா ராம் சர்வதேச செய்திச் சேவையொன்றிடம் தெரிவித்தார்.”என் மனைவி இறந்தபிறகு, மற்றொரு கைம்பெண்ணுடன் வாழ்ந்துவருகிறேன்.

நானும் எனது சமூகத்தினரின் அனுமதி பெற்று திருமணம் செய்துக் கொள்வேன்’ என்கிறார் அவர்.

மிகவும் பின் தங்கிய இந்த பழங்குடியின சமூகத்தில் இப்படியொரு திருமணம் நடைபெறுவது இந்திய சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய முக்கியமான சம்பவம் என்று பஹீச்சா பகுதியை சேர்ந்த சமூக சேவகர் ஹலீம் ஃபிர்தெளஸி கூறுகிறார்.திருமணத்துக்கான வயது வரம்பை பழங்குடியின சமூகத்தில் அறிமுகப்படுத்திய முன்மாதிரி சம்பவம் இது.

”நவீன சமூகத்திலும் திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இருப்பதால், வயதானவர்களில் பலர் முதியோர் இல்லத்தில் இருக்கின்றனர், அல்லது வீட்டின் ஒரு மூலையில் மரணத்தை எதிர்பார்த்து முடங்கி கிடக்கின்றனர்.

ஆனால், மீதமிருக்கும் காலத்தை முழு உற்சாகத்துடன் வாழ திருமணம் ஒரு வழியாக இருக்கிறது என்பதை இங்கு பார்ப்பதாக மணமகன் ஜூதேவ் தெரிவிக்கிறார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்