அத்துமீறிய புத்தர் சிலை நிர்மாணிப்புக்கு அமெரிக்கா எதிர்ப்பு

 

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அத்துமீறிய வகையில் அமைக்கப்படுவதற்கு அமெரிக்காவின் அரச திணைக்களம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது.

அமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான சுதந்திரம் என்ற அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த தேரர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்வதாகவும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் அத்துமீறிய வகையில் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் இங்கு பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் மத உரிமைகள் மீறப்படுவதாகவும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்