இலங்கையில்குறைந்த விலையில் கார் வாங்க காத்திருப்போருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி !

இலங்கையில் முதல் முறையாக 1000cc ரக டோயோட்டா வாகனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வாகனத்திற்கு wigo” என பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சாதாரண பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இளம் நிர்வாக அதிகாரிகளுக்காக இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் குறைந்த விலையில் இந்த வாகனம் சந்தையில் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

சாதாரண விலையில் பெற்றுக் கொள்ள கூடிய இந்த வாகனத்திற்கு இலங்கையினுள் அதிக கோரிக்கை உள்ளதாக டோயோட்டா லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வத்தளை, இரத்மலானை, குருணாகலை பிரதேசத்தில் இது தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள முடியும்.

‘wigo என்ற இந்த வாகனம் மிகவும் அலகான வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வாகனம் ஓட்டுவதற்கு ஆரம்பித்த நபர் ஒருவருக்கு இது மிகவும் பழக்கமான சாரதி ஒருவருக்கு போன்று ஓட்ட முடியும் என டோயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வாகனத்தின் பின் இருக்கையில் பயணிக்கும் பயணிகளுக்கு மிகவும் இலகுவாக தங்கள் பயணங்களை மேற்கொள்ளும் வகையிலும், பொருட்கள் கொண்டு செல்வதற்கு இடவசதியுடனும் இந்த வாகனம் காணப்படுகின்றது.

தொழில்நுட்பத்துடன் கூடிய பல வசதிகள் இந்த வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. டோயோட்டா லங்கா நிறுவனத்தினால் வழங்கப்படும் இந்த வாகனத்திற்கு 3 வருடங்களில் 100,000 கிலோமீற்றர் தூரம் பயணிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்