Friday, March 22, 2019

இலங்கை

சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவல்களை பதிவேற்றிய இரு மாணவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது!!

இனங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இரு பாடசாலை மாணவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும் ஹோமாகம, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் வைத்து...

காடு தாண்டி வந்து நகரிற்குள் புகுந்த குரங்குகள் உரும்பிராயில் அட்டகாசம்…!!

வன்னிப் பிரதேசத்திலும் யாழ் தென்மராட்சிப் பகுதிகளிலும் அதிக ஆதிக்கம் செலுத்தும் குரங்குகள் தற்போது நகர்ப்புறங்களிலும் தமது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டன. யாழ் உரும்பிராய் பிரதேசத்தில் இன்று காலை புகுந்த குரங்குகள் வீடுகளிலுள்ள...

ஒரேயொரு பதவிக்காக தவம் கிடக்கும் 12 ஆயிரம் பேர்!! கொழும்பு நீதிமன்ற வாசலில் விசித்திரம்!!

உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளர் பதவிக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளராக பதவி வகித்தவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதால் அப்பதவிக்கு அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.குறித்த...

ஜெனீவா செல்லும் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் குழுவில் வடக்கு ஆளுனர்…!!

தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இன்று காலை இடம்பெற்ற...

அச்சுறுத்தல்களையும் தடைகளையம் தாண்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!!

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக தமிழீழ மாவீரர்களுக்கும், தேச விடுதலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்...

ரயில் மோதி புகையிரதக் கடவை காவாலாளி பலி!! மன்னாரில் சோகம்…!!

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்தில் மோதி புகையிரதக் கடவையில் இரவு நேரக் காவலாளியாக கடமையாற்றிய ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் மன்னார் உயிர்த்தராசன் குளம் கஞ்சித்தாழ்வுப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.தகவலறிந்த...

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தி….விரைவில் புதிய ரயிலில் குதூகலப் பயணம்….!!

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் எதிர்வரும் 21ஆம் நாளிலிருந்து புதிய தொடருந்து ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இதன்படி, இலங்கை தொடருந்துத் திணைக்களம் இந்தியாவிடம் இருந்து வாங்கிய S13 எனும் புதிய தொடருந்தே எதிர்வரும்...

தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி இன்னமும் முடிவு செய்யவில்லை… தயாசிறி ஜெயசேகர

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என ஜனாதிபதி இதுவரை முடிவு செய்யவில்லை என சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். அவரை தான் அடுத்த வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற...

தீயில் எரிந்து கருகிய புத்தம் புதிய உந்துருளிகள்….!! வவுனியாவில் தொடரும் அட்டூழியம்…!!

வவுனியா- பட்டானிச்சூரில் அமைந்துள்ள உந்துருளி விற்பனை நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதில் 21 உந்துருளிகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேமடைந்துள்ளன.வவுனியா – பட்டானிச்சூர் பிரதான வீதியில் அமைந்துள்ள...

போலிக் கடவுச்சீட்டில் இலங்கைக்கு இன்று வந்த தாய் மகளுக்கு ஏற்பட்ட கதி….!!

பிரித்தானிய கடவுச்சீட்டினை பயன்படுத்தி இலங்கைக்கு வந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரான் நாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவருமே, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு...

இலங்கையின் நாணயத்தாள்களை அச்சிடும் சீன நிறுவனம்….!!

இலங்கையின் ரூபா மற்றும் சில்லறை நாணயத்தாள்களை சீனாவின் அச்சு நிறுவனம் ஒன்றே அச்சிட்டு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் தெ மணிக்கொன்றோல் டொட் கொம் என்ற இணையம் இதனை தெரிவித்துள்ளது.சீனாவின் பேங்நோட் அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர்...

திடீர் தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி பலி!! யாழில் சோகம்!!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன் அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நெருப்புத் தணல் உள்ளது...

திடீரென இறந்து கடற்கரையில் குவியும் மீன்கள்…. இலங்கையில் பெரும் அதிர்ச்சி…..!!

இலங்கையின் ஒரு பகுதியிலுள்ள ஏரியில் திடீரென பெருந்தொகை மீன்கள் உயிரிழந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.பூந்தல தேசிய பூங்காவிற்கு சொந்தமான ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன.மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதப்பதை பூங்காவுக்கான பொறுப்பாளர்...

உயிர் துறந்தாலும் அழியாத முதுமைக் காதல்! கணவன் தற்கொலை செய்த அதிர்ச்சியில் மரணித்த மனைவி!!

அனுராதபுரத்தில் கணவன் தற்கொலை செய்து உயிரிழந்தமையை தாக்கிக் கொள்ள முடியாத மனைவியும் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது வயோதிப மனைவியை கவனிக்க தன்னிடம் ஒன்றும் இல்லாத காரணத்தினால், மனவிரக்தி அடைந்த கணவர்...

சுன்னாகத்தில் விபத்தை ஏற்படுத்திய அம்புலன்ஸ் சாரதியின் மனிதாபிமான மற்ற செயல்….!! பொதுமக்கள் கடும் விசனம்….!!

சுன்னாகம் நகரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயையும் மகனையும் மோதிவிட்டு அம்புலன்ஸ் சாரதி, மனிதாபிமானற்ற நிலையில் அன்புலன்ஸ் வண்டியை எடுத்துச் சென்றார் என்று விபத்து இடம்பெற்ற இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.அம்புலன்ஸ் வண்டியில் பயணித்த...