சாரதி அனுமதி அட்டையில் புதிதாக உள்ளெடுக்கப்படும் ஓர் புதிய விடயம் …

விபத்துக்களின் போது தங்களின் உறுப்புக்களை தானம் செய்வதற்கு அனுமதி வழங்கும் சாரதிகளின் விருப்பத்தை, சாரதி அனு மதி அட்டையில் பதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, விபத்துக்களின் போது உயிரிழக்கும் சாரதிகளின் உறுப்புக்களை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான விருப்பம் அவர்களது சாரதி அனுமதி அட்டையில் பதிக்கப்பட்டிருக்கும்.

இந்த விருப்பத்தை சாரதி அனுமதி அட்டையில் பதிக்கும் வகையில், சாரதி அனுமதி அட்டையில் மாற்றம் செய்வதற்கான அனும தியை அமைச்சரவை நேற்று வழங்கியுள்ளது.

இதன்படி,சாரதி அனுமதி அட்டை வழங்கும் விண்ணப்பப் பத்திரத்திலும் இதற்கான மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சு இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.