யாழ், கிளிநொச்சி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

யாழ், கிளிநொச்சி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலமையில் யாழ் நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர இளைஞர் முன்னணியின் தலைவரும் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்தபண்டார அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர இளைஞர் முன்னணியினருக்கு அங்கத்துவ அட்டையும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.